ஹோம் /நியூஸ் /உலகம் /

மொத்தம் 560 சடலங்கள்.. உடல் உறுப்புகளை வெட்டி விற்ற தாய், மகன் - அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்!

மொத்தம் 560 சடலங்கள்.. உடல் உறுப்புகளை வெட்டி விற்ற தாய், மகன் - அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்!

அமெரிக்கா

அமெரிக்கா

இறுதிச் சடங்கு இல்லத்திற்கு வரும் உடல்களை  மோசடியான மற்றும் போலி நன்கொடையாளர் படிவங்களைப் பயன்படுத்தி திருடி அதை வெளியே விற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

அமெரிக்காவின் கொலராடோவின்  இறுதிச் சடங்கு அமைப்பின் உரிமையாளர் ஒருவர் அனுமதியின்றி  560 சடலங்களை அறுத்து, உடல் உறுப்புகளை விற்றதன் மூலம் இறந்தவர்களின் உறவினர்களை ஏமாற்றி தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார். மேகன் ஹெஸ், 46, என்பவர் கொலராடோவின் மாண்ட்ரோஸில் சன்செட் மேசா என்ற இறுதி சடங்கு செய்யும் பிசினஸையும் டோனர் சர்வீசஸ் என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் நடத்தி வந்தார்.அவரது 69 வயதான தாயார் ஷெர்லி கோச்சும் அவரோடு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

ஹெஸ் மற்றும் கோச் இருவரும் சேந்து அவர்களது இறுதிச் சடங்கு இல்லத்திற்கு வரும் உடல்களை  மோசடியான மற்றும் போலி நன்கொடையாளர் படிவங்களைப் பயன்படுத்தி திருடி அதை வெளியே விற்றுள்ளனர். இதயங்கள், சிறுநீரகங்கள் மற்றும் தசைநாண்கள் போன்ற உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பது அமெரிக்காவில் சட்டவிரோதமானது. அவை தானமாக வழங்கப்பட வேண்டும்.  அதே நேரம் ஆராய்ச்சி அல்லது கல்வியில் பயன்படுத்துவதற்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது  கூட்டாட்சி சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. இதைப்பயன்படுத்தி மேகன் ஹெஸ் இந்த உடல் பாக விற்பனையை செய்துள்ளார். அதோடு போலி ஆவணங்கள் மூலம் தனமாக உறுப்புகளை விற்றுள்ளார்.  இது வெளியில் தெரியாமலே பல ஆண்டுகள் இருந்து வந்தது. 2016-2018 ராய்ட்டர்ஸ் புலனாய்வுத் தொடரால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஹெஸ்ஸிடமிருந்து  கால்கள், தலைகள் மற்றும் உடற்பகுதிகளை வாங்கிய அறுவைசிகிச்சை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அவை மோசடியாகப் பெறப்பட்டது என்று பின்னர் தான் தெரியவந்துள்ளது. அதேபோல் நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று பொய் சொல்லி அவர்களது உடலை வெட்டி விற்றுள்ளார். அதற்கு பதிலாக வேறு உடலின் சாம்பலை வழங்கியுள்ளதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல காலமாக ஒப்புக்கொள்ளாத அவர்கள் ஜூலை மாதம் மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேகன் ஹெஸ்ஸுக்கு  20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது 69 வயதான தாயார் ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கோச்சின் முக்கிய பங்கு உடல்களை வெட்டுவதாக இருந்தது, நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.

First published:

Tags: Donate body parts