அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய வடக்கு பகுதியில் அமெரிக்கத் தேசிய வானிலை மையம் அதிதீவிர பனிப்பொழிவுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்களைப் புரட்டிப்போட்ட பனிப்புயலால் வெள்ளிக்கிழமை அன்று சுமார் 2,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. குறிப்பாகத் துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் போன்றவை பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது அமெரிக்கப் பனிப்புயல் இடம்பெற்றுள்ளது. இந்த பனிப்புயலால் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டகோடாஸ், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அதிவேகத்தில் காற்று வீசி வருகிறது. மின்சாரம் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மேற்கு மற்றும் மத்திய வடக்கு பகுதியில் 2 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பகுதியில் சுமார் 55 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வானிலை மோசமாக உள்ளதால், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் மீட்புப் பணிக் குழுக்களும் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, California, Snowfall