ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்... 31 பேர் பலி : புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடக்கம்!

அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்... 31 பேர் பலி : புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடக்கம்!

அமெரிக்காவில் மோசமான பனிப்புயல்

அமெரிக்காவில் மோசமான பனிப்புயல்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வரலாறு கானாத பனிப்புயல் அந்நாட்டு மக்களின் பண்டிகை கால கொண்டாட்டங்களை முடக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaNew YorkNew York

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் மோசமான பனிக்காலத்தை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் வீசிவரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் குளிரால் தவித்து வருகின்றனர். குறிப்பாக நியூயார்க்கின் buffalo பகுதியில் மட்டும் 8 அடி உயரத்துக்கு பனி தேங்கி கிடப்பதால், போர்க்கால சூழலை தாங்கள் எதிர்கொள்வதாக நியூயார்க் ஆளுநர் கேதி ஹோசூல் கவலை தெரிவித்துள்ளார்.

எலும்பை உறைய வைக்கும் குளிரை சமாளிக்க முடியாமல் இதுவரை 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும், இந்த பனிப்புயல் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். இந்த பனிப்புயல் பாதிப்பு அந்நாட்டின் கிழக்கு பகுதி மாகாணங்களில்தான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இது கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகை காலமாகும். இரண்டு ஆண்டுகள் கொரோனா பாதிப்புக்கு பின் இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை விமரிசையாக மேற்கொள்ள அமெரிக்க மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இந்த பனிப்புயலானது அந்நாட்டு மக்களின் பண்டிகை கால கொண்டாட்டத்தை முடக்கியுள்ளது. அந்நாட்டில் தொடர்ச்சியாக 3 நாள்கள் ஆயிரக்கணக்கான விமான போக்குவரத்து சேவை ரத்தாகியுள்ளன.

இதையும் படிங்க: பசுமை இல்ல வாயு உமிழ்வு தொடர்ந்தால், 80% பென்குயின்கள் அழியும் அபாயம்- ஆய்வில் தகவல்

Flightaware.com இணையதள புள்ளிவிவரப்படி கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 6,000 விமானங்கள், சனிக்கிழமை 3,500 விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை 2,400 விமானங்கள் ரத்தாகியுள்ளன.பலரும் தங்கள் விடுமுறை சுற்றுலா திட்டத்தை கைவிட்ட நிலையில், புத்தாண்டு தினத்திற்குள்ளாவது தட்பவெட்ப நிலை சீரடையுமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.

First published:

Tags: America, Power cut, Snowfall, USA, Winter