Home /News /international /

தைவான் விவகாரத்தில் சீனா எல்லை மீறினால் அமெரிக்கா களமிறங்கும் - ஜோ பைடன் எச்சரிக்கை

தைவான் விவகாரத்தில் சீனா எல்லை மீறினால் அமெரிக்கா களமிறங்கும் - ஜோ பைடன் எச்சரிக்கை

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

சீனாவின் இறையாண்மை சார்ந்த விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என சீன தரப்பு ஜோ பைடனுக்கு பதிலடி தந்துள்ளது.

    தைவான் மீது சீனா ராணுவ அடக்குமுறையை நிகழ்த்தினால் தைவானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜோ பைடன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ’சீனா-தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விவரித்தார். அவர் கூறுகையில், "அமெரிக்கா, ஒரு சீனா என்ற பார்வையை கொண்டுள்ளது. அது மக்கள் குடியரசு சீனா என்ற ஒரு சீன அரசை மட்டுமே குறிக்கும். மாறாக, தைவானும் சீனாவின் அங்கம் என்ற கூற்றை அமெரிக்கா அங்கீகரிக்காது.

    ஒரு வேளை, தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி சீனா, தைவானை கைப்பற்ற நினைத்தால் அமெரிக்கா தனது ராணுவத்தை தைவானுக்கு ஆதரவாக நிறுத்தும். ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற முயற்சிப்பது போலத் தான் சீனா, தைவானை கைப்பற்ற நினைத்தால் விளைவுகள் இருக்கும். எனவே, இதுபோன்ற செயல்களில் சீனா செயல்படாது என நினைக்கிறேன். இது தொடர்பாக உலக நாடுகளும் சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும்" என்றார்.

    ஜோ பைடனின் இந்த கருத்துக்கு சீனாவும் உடனடியாக பதிலடி தந்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் அமெரிக்காவின் கருத்துக்கு கூறிய பதிலில், "தைவான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். சீனாவை சேர்ந்த பகுதியே தைவான். சீனாவின் இறையாண்மை சார்ந்த விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. சீனாவின் வலிமையை, திறனை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியா செல்ல மக்களுக்கு தடை விதித்த சவுதி அரேபிய அரசு

    தைவான் தன்னுடைய பகுதிதான் என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தன்னுடைய சுய ஆட்சி தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என தைவான் அரசு தொடர்ந்து கூறிவருகிறது. தைவானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், இதை வைத்து அமெரிக்காவும் சீனாவும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். இதேபோல், ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளையும் நீர்த்துப்போக வைத்து முழு பிராந்தியத்தையும் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயற்சி செய்துவருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: China, Joe biden, Taiwan, USA

    அடுத்த செய்தி