அமெரிக்கா: கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் துப்பாக்கிகள் பரிசு: வெஸ்ட் வர்ஜீனியாவின் கவர்னர் அறிவிப்பு

வெஸ்ட் வர்ஜீனியா கவர்னர் ஜிம் ஜஸ்டிஸ்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக வெஸ்ட் வர்ஜீனியா மாகாண கவர்னர் ஜிம் ஜஸ்டிஸ் விநோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  இதன்படி அறிவிக்கப்பட்ட லாட்டரி போன்ற 1.588 மில்லியன் டாலர்கள் பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் துப்பாக்கிகள், ரைபிள்களும் அடங்கும்.

  செவ்வாய்க் கிழமையன்று இதன் முழு விவரங்களை அறிவித்த வெஸ்ட் வர்ஜீனியா கவர்னர் ஜிம் ஜஸ்டிஸ் ஜூன் 20ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும் என்றார்.

  அடிச்சா லக்கி பிரைஸ் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் 1.588 மில்லியன் டாலர்கள் கிராண்ட் பிரைஸ் உண்டு. 5,88,000 டாலர்கள் இரண்டாம் பிரைஸ். அதே போல் வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்திலும் உயர்கல்விக்கான முழு உதவித்தொகையும், மாகாண பூங்காக்களில் வார இறுதிப் பொழுது போக்குச் செலவுகள், வாழ்நாள் முழுதும் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடி லைசன்ஸ்கள், வேட்டைத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் இந்த திட்டத்தில் வாக்சின் போட்டுக்கொள்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

  Also Read: கொரோனா மரணம் இல்லாத நாள்: பிரிட்டனிலிருந்து நற்செய்தி
  “எவ்வளவு வேகமாக வாக்சின் போட வைக்கிறோமோ அவ்வளவு வேகமாக பல உயிர்களைக் காப்பாற்றலாம். என்பதற்காகவே இந்தத் திட்டம்” என்கிறார் கவர்னர் ஜிம் ஜஸ்டிஸ்.

  கடந்த வாரமும் இதே போன்ற தடுப்பூசி ஊக்குவிப்புத் திட்டமாக 16-35 வயதுடையோர் வாக்சின் போட்டுக் கொண்டால் சேமிப்புப் பத்திரம் அல்லது 100 டாலர் பரிசுக்கூப்பன் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வெஸ்ட் வர்ஜீனியா சுகாதாரத்துறை கணக்குகளின் படி 51% மக்கள் இதுவரை ஒரு ஷாட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது அமெரிக்காவின் மற்ற மாகாணங்களை விடக் குறைவு என்பதால் துரிதப்படுத்த இப்படிப்பட்ட பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளனர்.

  Also Read:  CBSE : குழு அமைத்து மதிப்பெண்கள் கணக்கீடு... சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
   இது மட்டுமல்ல மற்ற மாகாணங்களிலும் இது போன்ற இலவசத் திட்டங்களை தடுப்பூசிப் போட்டுக் கொள்பவர்களுக்காக அறிவித்துள்ளனர். உதாரணமாக நியு ஜெர்சியில் இலவச பீர், ஆரிகன் போன்ற மாகாணங்களில் லாட்டரிகள் பரிசளிப்பது போன்ற திட்டங்கள் ஏற்கெனவே அமலில் உள்ளன.
  Published by:Muthukumar
  First published: