• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தெற்கு சீனக் கடல் பகுதியில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்!

தெற்கு சீனக் கடல் பகுதியில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்!

தெற்கு சீனக் கடல்

தெற்கு சீனக் கடல்

மலேசிய எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பலான வெஸ்ட் கேப்பல்லாவை மலேசிய கடல் எல்லைக்குள் பின் தொடர்ந்து சென்று சீனா கண்காணித்து வருகிறது.

  • Share this:
    தெற்கு சீன கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவின் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் மற்றும் கடல் பகுதிக்கு மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், சீனாவின் தெற்கு எல்லையில் மலேசியாவுக்கு அருகே தென் சீனக் கடலில் அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் 'பங்கர் ஹில்' எனும் ஏவுகணை கப்பல் ஆகியவை நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இந்தோபசிபிக் பிரிவு செய்தித் தொடர்பாளர் நிக்கோல் ஸ்வெக்மேன் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் மலேசிய எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பலான வெஸ்ட் கேப்பல்லாவை மலேசிய கடல் எல்லைக்குள் பின் தொடர்ந்து சென்று சீனா கண்காணித்து வருகிறது.

    இதையடுத்தே தனது ஆதரவு நாடுகளை காப்பாற்றுவதற்காக, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் போர்கப்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    Also see...

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: