• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது - இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது - இம்ரான் கான் குற்றச்சாட்டு

இம்ரான் கான்

இம்ரான் கான்

பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், முதல் முறையாக CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த அந்த அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என கூறினார்.

    பெண்களின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய அரசு ஆகியவற்றில் தாலிபான்களை ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு வெளியிலிருந்து உரிமைகளை பெற்று தர முடியாது என குறிப்பிட்ட இம்ரான் கான், அவர்கள் மிகவும் வலிமையானர்கள் என்பதால், அவர்களின் உரிமைளை அவர்களே பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

    பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானுடனான உறவு மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிலின்கனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், தான் இதுவரை இவ்வளவு அறியாமையை கண்டதில்லை என கூறினார்.

    இதனிடையே ஆப்கானிஸ்தானின் துணை பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் கனி பராடர் இறந்துவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

    Also read: குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! - எதுக்குனு தெரியுமா?

    காபூலில் உள்ள அதிபர் மாளிகையில், தாலிபான்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பராடர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து, தான் நலமுடன் இருப்பதாக அப்துல் கனி பராடர் ஆடியோ பதிவு வென்றை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: