மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்! டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்! டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
டெல்லி வன்முறை
  • Share this:
டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அமெரிக்காவிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட இதுவரையில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய குடியிருப்புகள் பெருமளவில் வன்முறைக்கு இறையாகின. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்கள் அமைதி வழியில் கூடி போராடுவதை மதிக்கவேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டும். வன்முறைச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.


எல்லா தரப்பினரும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும், வன்முறையிலிருந்து விலகி இருக்கவேண்டும். இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து வலியுறுத்தப்படும். மதச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் அடிப்படையான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கோலின் ஆல்ரெட், ‘சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதிலும், எல்லாரையும் இணைத்துக் கொள்வதிலும்தான் ஜனநாயகம் வலிமையாகிறது. உலகின் மிகப் பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதும் அவர்களுக்கு எதிரான வன்முறையின் காரணமாக இந்தியாவின் மதிப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு உறவுகளுக்கு குழுவின் உறுப்பினரும் அமெரிக்க ஜனநாயகக் கட்சித் தலைவருமான பாப் மென்னென்டெஸ், ‘டெல்லி வன்முறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு அனைத்து குடிமகன்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். அமைதி வழியில் போராடுபவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், ஜனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்க தனது குரலை எழுப்ப வேண்டும். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும், சர்வதேச சமூகமும் டெல்லி கலவரத்துக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும். அனைத்து குடிமக்களின் மத உரிமையைப் பாதுகாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.அமெரிக்க -இஸ்லாமிய உறவுக்கான கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி கலவரம் தொடர்பாக அமெரிக்க அரசு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

Also see:

First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading