காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் - தாலிபான்கள் அதிர்ச்சி!

US Troops

அமெரிக்க ராணுவ தளவாடங்கள் செயல்படாத நிலையில் இருப்பதை அறிந்த தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
காபுல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க படையினர் முழுமையாக வெளியேறிய நிலையில், அவர்கள் காபுலை விட்டு செல்லும் முன், தாலிபான்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராஜதந்திர நடவடிக்கை ஒன்றை செய்துவிட்டு சென்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றிய அல்கொய்தா தீவிரவாத அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஆப்கனில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கியது அமெரிக்கா. கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதிகள் இல்லாத ஆப்கனை உருவாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வந்த நிலையில் தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறியது. இதனிடையே ஆப்கனில் மக்களாட்சி ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆப்கன் ராணுவத்துக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய அமெரிக்க படையினர் அவர்களுக்கு போர் பயிற்சிகளை கற்றுத்தந்தனர். தீவிரவாத நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்றதால் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவெடுத்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபுல் நகரை தாலிபான்கள் கையகப்படுத்திய நிலையில் அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று நள்ளிரவு (ஆகஸ்ட் 30) அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறினர். இதையடுத்து தங்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக தாலிபான்கள் கொண்டாடினர்.

காபுலின் ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமெரிக்க படையினரின் கடைசி ராணுவ விமானம் வெளியேறிய பின்னர் விமான நிலையத்தின் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்ற தாலிபான்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

Also Read:  தாலிபான்களுடன் இந்தியா முதல் முறையாக அதிகாரப்பூர்வ பேச்சு!

ஆப்கனில் இருந்து வெளியேறும் முன்னர் தங்களின் தளவாடங்களை முழுமையாக அமெரிக்க படையினர் எடுத்துச் செல்ல போதுமான நேரம் கிட்டவில்லை. இருப்பினும் தங்கள் நாட்டு ராணுவ தளவாடங்கள் தாலிபான்கள் கைக்கு செல்வதை தவிர்க்க சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீக்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போன்றவற்றை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிட்டு தான் அமெரிக்க படையினர் வெளியேறியிருக்கின்றனர்.


ஆப்கனை விட்டு வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்


அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் காபுல் விமான நிலையத்தில் சினூக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு செல்லும் தாலிபான்கள் அவற்றை பார்வையிடும் வீடியோவை பத்ரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.



Also Read:  நாட்டையே உலுக்கிய மைசூரு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் சிக்கிய தமிழர்கள்!

இதனிடையே ராணுவ தளவாடங்களை செயலிழக்கச் செய்தது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கன்சி, “காபுல் விமான நிலையத்தில் இருக்கும் 73 ராணுவ விமானங்களை அமெரிக்க படையினர் செயலிழக்கச் செய்துவிட்டனர். இனி அவற்றை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது. அவை ஒருபோதும் பறக்காது. அவற்றை யாராலும் பறக்க வைக்கவும் முடியாது. இதே போல 27 ஹம்வீ வாகனங்களும், 74 MRAP கவச வாகனங்களும் நிரந்தரமாக பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

கவச வாகனம் ஒன்று மட்டுமே 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. அதாவது நம்மூர் மதிப்புக்கு 7.30 கோடி ரூபாய்.

Also Read:   மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் – சிக்கிய 50 வீடியோக்கள்!

மேலும் இந்த தளவாடங்களை வெடிக்க வைத்து செயலிழக்க வைப்பதை அமெரிக்க படையினர் தவிர்த்து விட்டனர். அப்படிச் செய்திருந்தால் விமான நிலையத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பயணிகள் விமானங்களை அங்கு இயங்க வைக்கும் முயற்சியாக ராஜ தந்திர வகையில் அமெரிக்க படையினர் செயல்பட்டிருப்பதாக கென்னத் மெக்கன்சி குறிப்பிட்டார்.

இதனிடையே காபுல் விமான நிலையத்தில் நிறுவியிருந்த C-RAMS எனப்படும் ராக்கெட் எதிர்ப்பு அமைப்பையும் அமெரிக்க படையினர் செயலிழக்க வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத வகையில் செய்திருக்கின்றனர். அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு கடைசி நிமிடம் முன்பு வரை இந்த ராக்கெட் எதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தான் ஐ.எஸ் அமைப்பினரின் தாக்குதல்களை சில மணி நேரங்கள் முன்பு வரை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தகுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்க ராணுவ தளவாடங்கள் செயல்படாத நிலையில் இருப்பதை அறிந்த தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
Published by:Arun
First published: