முகப்பு /செய்தி /உலகம் / பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா

பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா

ட்ரம்ப் (கோப்புப்படம்)

ட்ரம்ப் (கோப்புப்படம்)

  • Last Updated :

காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியாவுடன் பேச, பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். இதை நிராகரித்த இந்தியா, காஷ்மீர் பிரச்னையில் 3வது நாடு தலையிடத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், நாளை இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்னை குறித்து பேசுவார் என பாகிஸ்தான் கூறியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, காஷ்மீர் பிரச்னையில் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் முதலில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்கா பேச வேண்டும் என்றால், முதலில் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

top videos

    First published:

    Tags: Trump India Visit