பாரீஸ் ஒப்பந்தத்தைவிட்டு வெளியேறும் அமெரிக்கா... பருவநிலை மாற்றத்தை தடுக்க தவறுகிறாரா ட்ரம்ப்..?

சர்வதேச அளவில் அதிகப்படியான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் ஒப்பந்தத்தைவிட்டு வெளியேறும் அமெரிக்கா... பருவநிலை மாற்றத்தை தடுக்க தவறுகிறாரா ட்ரம்ப்..?
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: November 5, 2019, 5:31 PM IST
  • Share this:
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடைமுறையின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

பாரீஸ் ஒப்பந்தத்தைவிட்டு வெளியேறுவதற்கான ஓராண்டுகால நடைமுறையை ட்ரம்ப் தொடங்கியுள்ளார். உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டி ஐநா உடன் உலக நாடுகள் இணைந்து பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் அமெரிக்கா இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால், அமெரிக்க தொழிற்துறையைக் கட்டுப்படுத்துவது போல் உள்ள இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். சர்வதேச அளவில் அதிகப்படியான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆனால், ட்ரம்ப் ஆட்சி நிறைவடந்து புதிய ஆட்சி வந்தால் நிச்சயம் பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா இணையும் என எதிர்கட்சியினர் உறுதி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினால் போதும்... மைக்ரோசாப்ட்டின் புது ஐடியா!

மேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்!
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்