சவுதி அரேபியாவிற்கு கூடுதல் படைகள்... அமெரிக்கா அறிவிப்பு

சவுதி அரேபியாவிற்கு கூடுதல் படைகள்... அமெரிக்கா அறிவிப்பு
  • Share this:
சவுதி அரேபியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ள சவுதி அரேபியாவின், அராம்கோ எண்ணெய் நிறுவனம் உலகின் மிக அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் ஆகும். அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் மீது, கடந்த மாதம் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதி குழு பொறுப்பேற்றது. ஆனால் ஈரான் ஆயுதங்களை வழங்கியதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றச்சாட்டியது. இந்த தாக்குதல் எதிரெலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.


சவுதி அரேபியாவின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதால் அமெரிக்காவிடம் அந்நாடு உதவிக் கேட்டது. சவுதியின் கோரிக்கையை ஏற்று தனது படை அனுப்பப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சவுதிக்கு பாதுகாப்பாக கூடுதலாக போர்க்கப்பல்கள், ஒரு போர் விமானம் விமானப் படை வீரர்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்பு ஒன்றையும் அனுப்பி வைக்க உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Watch
First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்