முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளிக்குள் நுழைந்து 18 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற கொடூரன்

அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளிக்குள் நுழைந்து 18 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற கொடூரன்

டெக்சாஸ் பள்ளிக்குழந்தைகள் 18 பேர் சுட்டுக்கொலை

டெக்சாஸ் பள்ளிக்குழந்தைகள் 18 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக்குழந்தைகள் 18 பேர் உட்பட 21 பேரை பதின்ம வயது நபர் ஒருவன் கொடூரமாகச் சுட்டுக்கொன்றது பெரும்பரபரப்பையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக்குழந்தைகள் 18 பேர் உட்பட 21 பேரை பதின்ம வயது நபர் ஒருவன் கொடூரமாகச் சுட்டுக்கொன்றது பெரும்பரபரப்பையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த இது போன்ற கொடூர கொலைகளிலேயே இதுதான் மிகப்பயங்கரமானது என்று அங்கு இந்த கொடூரச் செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ எல்லையிலிருந்து சுமார் 1 மணி நேர தூரத்தில் உள்ள உவால்டே என்ற இடத்தில்தான் இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் தன் கொடூர முகத்தைக் காட்டியுள்ளது. 18 வயதே நிரம்பிய ஒருவனுக்குள் இத்தனை கொடூர எண்ணமா என்றால் நம்ப முடிகிறதா? முதலில் தன் பாட்டியை சுட்டுக் கொன்றான். பிறகு அப்பகுதியில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று தான் வந்த வண்டியை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குள் நுழைந்தான்.

இந்தக் கொடூரன் பெயர் சால்வடார் ரேமோஸ் என்று கவர்னர் கூறியுள்ளார். இவனை சம்பவ இடத்திலேயே போலீஸ் சுட்டுக்கொன்றது. இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு காயமடைந்தனர். சால்வடார் ரேமோஸ் தனியாகவே இந்த ஈவு இரக்கமற்ற கொடுஞ்செயலைப் புரிந்ததாக கவர்னர் தெரிவித்தார்.

முதலில் 14 குழந்தைகள் ஒரு ஆசிரியர் பலியானதாக தகவல் வந்தது, ஆனால் பிற்பாடு 18 குழந்தைகள் 3 பெரியவர்கள் என்று 21 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றிருப்பது தெரியவந்தது.

10 நாட்களுக்கு முன்புதான் நியூயார்க், பஃபலோவில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏன் இப்படிச் சுட்டான், மனநிலை பிறழ்ந்தவனா போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சான் ஆண்டோனியோவில் உள்ள பல்கலைக் கழக மருத்துவமனையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 66 வயது மூதாட்டி மற்றும் 10 வயதேயான சிறுமி உயிருக்குப் போராடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய துக்க தினமாக அனுசரித்துள்ளார். அமெரிக்காவில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டுள்ளார். மே 28 வரை கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மேலும் துப்பாக்கிச் சட்டங்களை மேலும் இறுக்கமடையச் செய்ய வேண்டும் என்று அவர் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார். பலியான குழந்தைகள் 7 முதல் 10 வயதுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவையே உலுக்கி அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Joe biden, US, Us shooting