ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் - அமெரிக்க படைகள் இடையே, கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்த நிலையில், இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதால் அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும். ஆப்கானின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், ஆப்கான் அரசு மற்றும் தாலிபான்களுடன் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைதான் அந்நாட்டின் அமைதியை உறுதிபடுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஆப்கான் தலைநகர் காபூலிற்கு சென்ற இந்திய வெளியுறவு செயலா் ஹா்ஷ் வா்தன் ஷிரிங்லா, அந்நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலை ஏற்படுவதற்கு இந்தியாவின் முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.