முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூன்.. சுட்டு வீழ்த்திய விமானம்.. பரபரப்பு சம்பவம்..!

அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூன்.. சுட்டு வீழ்த்திய விமானம்.. பரபரப்பு சம்பவம்..!

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனின் உதிரி பாகங்களை கைப்பற்றி அதன் கூறுகளை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashington

அமெரிக்கா - சீனா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கை தீவிரப்படுத்தும் விதமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவிற்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனாவின் உளவு பார்க்கும் பலூன் ஒன்று அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பறக்கவிடப்பட்டுள்ளது, இரு நாடுகளுக்கிடையே ஒரு பதற்றமான சூழலை புதிதாக உருவாக்கியது.

சாதாரண வணிக வகை விமானங்கள் 65,000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். ஆனால், சீனாவின் இந்த பலூன் 80,000 அடி முதல் 1,20,000 அடி வரை பறந்துள்ளது. இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொன்டானாவில் உள்ள விமான படை தளவாடத்தின் மீது பறந்து சென்றதாகவும், அங்கு அமெரிக்க விமான தளங்கள் மற்றும் நாடு விட்டு நாடு பாயும்  அணுசக்தி ஏவுகணைகள் 150க்கும் அதிகமாக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் காலகட்டத்தின் போது இது போன்ற பல பலூன்கள் பறந்த நிலையில், சீனாவின் பலூன் உளவு சேகரிப்பு கண்ணோட்டத்தில் பறந்தது அமெரிக்காவுக்கு பெரும் சீண்டலாக அமைந்தது. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்தார். தொடர்ந்து F-22 ரக விமானத்தை கொண்டு  சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

சீனாவின் அத்துமீறலுக்கான பதிலடி இது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிடு ஆஸ்டின் கூறியுள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் உதிரி பாகங்களை கைப்பற்றி அதன் கூறுகளை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதேவேளை அமெரிக்கா தேவையில்லாமல் அதீத எதிர்வினை ஆற்றியுள்ளதாக சீனா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சிவில் விமானமாகும். அதை சுட்டு வீழ்த்துவது சர்வதேச விதிகளை மீறிய செயல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமைகளை சீனா பாதுகாக்கும் என பதில் தெரிவித்துள்ளது.

First published:

Tags: China, USA vs CHINA