ஹோம் /நியூஸ் /உலகம் /

கைகுலுக்க மறுத்த ட்ரம்ப்... உரையை கிழித்த சபாநாயகர்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கைகுலுக்க மறுத்த ட்ரம்ப்... உரையை கிழித்த சபாநாயகர்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு

நான்சி பெலோசி ட்ரம்பின் உரை நகலை கிழித்தெறிந்த போது

நான்சி பெலோசி ட்ரம்பின் உரை நகலை கிழித்தெறிந்த போது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்னுடன் கைகுலுக்க மறுத்ததால் அதிபர் ட்ரம்பின் உரையை சபாநாயகர் நான்சி பெலோசி கிழித்து போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற வந்த ட்ரம்பை வரவேற்கும் விதமாக செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

  ட்ரம்ப் உரையாற்றும் முன்பு முக்கிய கோப்புகளை சபாநாயகர் நான்சி பெலோசியிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட நான்சி, ட்ரம்புடன் கைகுலுக்க முயன்றார். இதனை கண்டுகொள்ளாத ட்ரம்ப், தனது உரையை தொடங்கினார்.

  தொடர்ந்து 78 நிமிடங்கள் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலை உட்பட முக்கிய விவகாரம் குறித்து பேசினார். ஆனால், தனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் குறித்து எதுவும் உரையில் குறிப்பிடவில்லை.

  இந்த உரையின்போது குடியரசு கட்சி உறுப்பினர்கள் இன்னும் 4 ஆண்டுகள் ட்ரம்ப் ஆட்சி நீடிக்கும் என்று முழக்கங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். ட்ரம்ப உரையை முடித்தபோது அவருக்கு பின் புறம் அமர்ந்திருந்த நான்சி பெலோசி திடீரென எழுந்து நின்று ட்ரம்பின் உரை நகலை கிழித்தெறிந்தார்.

  இதனால், அவை உறுப்பினர்கள் திகைப்புக்குள்ளாகினர். இருப்பினும், ட்ரம்ப் அதனை கண்டுகொள்ளாமல் அவையை விட்டு வெளியேறினார். ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதில் நான்சி பெலோசி முக்கிய பங்கு வகித்து குறிப்பிடத்தக்கது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: