இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி என்றாலே வண்ண விளக்குகளும், பட்டாசுகளும் தான் நமது நினைவுக்கு வரும். வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைகளை விடாமல் நினைவு கூர்ந்து அந்தந்த நாடுகளில் இருந்தே கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளை, அந்நாட்டு அரசு சட்ட திட்டங்களின் படி தான் அந்த கொண்டாட்டங்கள் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இந்தியர்களின் பண்டிகைகளை கொண்டாட அனுமதித்து அவர்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். குறிப்பாக சமீப காலத்தில் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
அந்நாட்டின் அதிபரே தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் பங்கேற்கிறார். அதிபரின் வெள்ளை மாளிகையிலேயே இந்தியர்களை வரவழைத்து இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 2002இல் இருந்து ஆண்டு தோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. 2007ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தீபாவளி பண்டிகைக்கு அங்கீகாரம் வழங்கியது.
இதையும் படிங்க: கோர நிலநடுக்கத்தை சாதகமாக வைத்து 20 ஐஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறையில் இருந்து தப்பியோட்டம்
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள உத்தா மாகாண மேலவையில் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் உட்டா மாகாணத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் 5 நாள்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை அன்று மாகாணத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diwali, Diwali festival, USA