• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்

’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடத் தேவையில்லை என சவுதி பதிலடி கொடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பத்திரிகையாளர் கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு என அமெரிக்க செனெட் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ’வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றார். அதன் பின்னர் மாயமானார்.

சவுதி இளவரசர் தான் தனது ஆட்களை அனுப்பி கஷோகியைக் கொலை செய்துள்ளார் எனத் துருக்கி ஆதாரத்துடன் குற்றம் சுமத்தியது. உலக நாடுகள் பலவும் கஷோகி மரணத்துக்கும் சவுதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என குற்றம் சுமத்தின.

கொல்லப்பட்ட கஷோகி


அமெரிக்க செனெட் உறுப்பினர்களும் கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசர் மீதே குற்றம் சுமத்தினர். ஆனால், தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மட்டும் சவுதி இளவரசருக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.

இந்நிலையில், சவுதி இளவரசருக்கு ஆதரவாகப் பேசத் தேவையில்லை என ட்ரம்ப்புக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்க செனெட் சபை, சவுதி இளவரசர் தான் கஷோகி மரணத்துக்குப் பொறுப்பு என சபையில் தீர்மானமும் நிறைவேற்றியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், சவுதி அரேபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடத் தேவையில்லை என சவுதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க: ராட்சத அலைகள்... கடற்கரை பகுதியில் மக்கள் வெளியேற்றம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: