ஹோம் /நியூஸ் /உலகம் /

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை மீதான ராகுல் காந்தியின் விமர்சனத்தை ஏற்க மாட்டோம்- அமெரிக்கா

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை மீதான ராகுல் காந்தியின் விமர்சனத்தை ஏற்க மாட்டோம்- அமெரிக்கா

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை பாகிஸ்தான்-சீனா உறவை வலுப்படுத்தியது என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாதத்தை ஏற்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நாடுகள் தமக்காக பேச வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை பாகிஸ்தான்-சீனா உறவை வலுப்படுத்தியது என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாதத்தை ஏற்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நாடுகள் தமக்காக பேச வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா தங்கள் உறவைப் பற்றி பேசுவதற்கு நான் அதை விட்டுவிடுகிறேன். நான் நிச்சயமாக ராகுல் காந்தியின் அந்த கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன்,” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கருத்துகள் குறித்துக் கேட்டபோது தெரிவித்தார். மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை சீனாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக இணைத்துள்ளது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யும் ஆன ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் யாரை மற்ற நாடுகள் தேர்வு செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்குத் தேவையற்ற விஷயம். பாகிஸ்தானுடனான தனது உறவை அமெரிக்கா மதிப்பதாகவும் பிரைஸ் கூறினார்.

"உலகம் முழுவதும் உள்ள எந்த நாடும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் எல்லா நேரத்திலும் குறிப்பிட்டுள்ளோம். அமெரிக்காவுடனான உறவு எப்படி இருக்கும் என்று வரும்போது நாடுகளுக்கு தேர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்," என்று பிரைஸ் திட்டவட்டமாகக் கூறினார். பாகிஸ்தான் சீனாவுடன் நெருக்கமாக இருக்க பாகிஸ்தான் தங்களை அமெரிக்க கைவிட்டு விட்டதாக உணர்ந்ததா என்பதை மறுத்தார்.

“பாகிஸ்தான் அமெரிக்காவின் பொருளாதார-ராணுவ, ராஜியப் பங்காளி. இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்கத்துடன் எங்களுக்கு ஒரு முக்கியமான உறவு உள்ளது, மேலும் இது பல முனைகளில் நாங்கள் மதிக்கும் ஒரு உறவாகும், ”என்று அவர் கூறினார்.

First published:

Tags: India vs China, Rahul gandhi, US