• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா: அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது - ஈரான்

கொரோனா: அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது - ஈரான்

அப்பாஸ் முசாவீ, ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்.

அப்பாஸ் முசாவீ, ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்.

அமெரிக்காவில் உள்ள அரசியல் பிரமுகர்களும் மனித உரிமைக் குழுக்களும் ஈரான் மீதான தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் கொரோனாவை வீழ்த்துவதற்கு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

    ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் முசாவீ கூறும்போது, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்; அவை அநீதியானது, சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாகரிகமடைந்த உலகம் மனிதாபிமானமற்ற, அநீதியான இந்நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக, அமெரிக்காவின் உதவி ஈரானுக்குத் தேவையில்லை என்று இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் உள்ள அரசியல் பிரமுகர்களும் மனித உரிமைக் குழுக்களும் ஈரான் மீதான தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவும் ரஷ்யாவும் இதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பாதித்த நாடான ஈரானில் இதுவரை கொரோனாவால் 60,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுமார் 4000 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: