• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • நாடு கடத்தப்பட்ட 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சிலைகளை கம்போடியாவிற்கே திருப்பி அனுப்பிய அமெரிக்கா!

நாடு கடத்தப்பட்ட 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சிலைகளை கம்போடியாவிற்கே திருப்பி அனுப்பிய அமெரிக்கா!

சிலைகளை கம்போடியாவிற்கே திருப்பி அனுப்பிய அமெரிக்கா

சிலைகளை கம்போடியாவிற்கே திருப்பி அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருந்த சில கல் சிற்பங்களை மீண்டும் அதன் சொந்த நாட்டிற்கே அனுப்பினர்.

 • Share this:
  கடத்தப்பட்ட கலைப்பொருட்களை மீட்டெடுப்பதற்காக நியூயார்க் புலனாய்வாளர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணைகளுக்கு பிறகு, இந்து மற்றும் புத்த சிலைகள் உட்பட 27 பழங்கால சிற்பங்களை கம்போடியாவிற்கு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. சுமார் 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த பொருட்களில் பல இந்து மற்றும் அங்கோரிய புத்த சிலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாகத்தில் புத்தரை தியானிக்கும் வெண்கலம், சிவன் சிலை, மற்றும் பிரஜ்னபராமிதாவின் புத்த மணற்கல் சிற்பம் ஆகியவை இதில் அடங்கும்.

  இது குறித்து மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் சை வான்ஸ் ஜூனியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, "கம்போடிய மக்களுக்கு இந்த 27 அதிர்ச்சியூட்டும் நினைவுச்சின்னங்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டின் பழங்கால அங்கோர் சகாப்தத்திற்கும் அதன் நவீன பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையிலான ஒரு முக்கியமான தொடர்பை மீட்டுள்ளது. இருப்பினும் இந்த பழங்கால சிலைகள் நீண்ட காலமாக கடத்தல்காரர்களின் பேராசையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

  Also Read:பார்ப்பதற்குதான் ‘டான்’ போன்ற தோற்றம்... வேக்சின் போட்டவுடன் ஊசி பயத்தில் மயக்கம்...- வைரலாகும் பிரேசில் நபரின் வீடியோ!

  இந்த நிலையில் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் நுண்கலை அமைச்சர் ஃபியூங் சக்கோனா கூறியதாவது, மீட்கப்பட்ட சிலைகள் எங்கள் நாட்டு மூதாதையர்களின் காணாமல் போன ஆத்மாக்கள் என்று கூறினார். மன்ஹாட்டனின் தொல்பொருள் கடத்தல் பிரிவு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைகள் ஆகியவற்றின் விசாரணைக்கு பின்னர் கிட்டத்தட்ட 400 கம்போடிய பொருட்கள் சுமார் 10 நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

  அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருந்த சில கல் சிற்பங்களை மீண்டும் அதன் சொந்த நாட்டிற்கே அனுப்பினர். பல தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், கையால் செதுக்கப்பட்ட இரண்டு மத கலைப்பொருட்கள், 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணற்கல் லிண்டல்கள் அடங்கும். கிட்டத்தட்ட 1,500 பவுண்டுகள் (680 கிலோகிராம்) எடை கொண்ட தொல்பொருட்கள் தாய்லாந்திலிருந்து திருடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

  Also Read: 2021ம் ஆண்டில் உலகளவில் வாழ்வதற்கு தகுதியான நகரங்கள் பட்டியல்!

  சான் பிரான்சிஸ்கோ ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இந்த லிண்டல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் ஒரு சிவில் லாசூட், மூன்று ஆண்டு நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு அருங்காட்சியகத்தை சொந்தமாகக் கொண்ட சான் பிரான்சிஸ்கோ பண்டைய மணற்கல் அடுக்குகளை தாய்லாந்துக்கே ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள இரண்டு மத சரணாலயங்களின் கட்டமைப்பு பகுதிகளாக இந்த லிண்டல்கள் இருந்தன.

  சிவில்துறை புகாரின் படி, 1960-களில் லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள கேலரிகளில் ஒரு கலெக்டர் மூலம் லிண்டல்களைப் பெற்றதாக பதிவுகள் காட்டின. ஏவரி ப்ரண்டேஜ் என்ற அந்த கலெக்டர், தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக லிண்டல்களில் ஒன்று எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை வெளிப்படையாக அறிந்தவர் என்று அப்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: