செல்ஃபோன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் பீட்சா இலவசம்..!

மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 4:26 PM IST
செல்ஃபோன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் பீட்சா இலவசம்..!
மாதிரிப்படம் (Reuters)
Web Desk | news18
Updated: June 11, 2019, 4:26 PM IST
அமெரிக்காவில் உள்ள பீட்சா கடை ஒன்று செல்ஃபோன் பயன்படுத்தாமல் சாப்பிடும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்குகிறது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரெஸ்னோ நகரில் கரி பீட்சா நிறுவனம் உள்ளது. இந்த உணவகத்தில் சாப்பிட வருபவர்கள் தங்களது செல்ஃபோனை பயன்படுத்தாமல் அருகில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிட்டால் இலவசமாக பீட்சா வழங்குகிறது.

குழுவாக சாப்பிட வந்தால் அந்தக் குழுவில் இருப்பவர்களுள் குறைந்தபட்சமாக நான்கு பேர் செல்ஃபோன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் அந்த ஒட்டுமொத்த குழுவுக்குமே இலவச பீட்சா வழங்குகிறது இந்த உணவகம். இந்த சவாலுக்குத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் உணவகப் பணியாளர்களிடம் தங்களது செல்ஃபோனை ஒப்படைத்துவிட வேண்டும்.

செல்ஃபோன் லாக்கரில் வைக்கப்படும். அப்போது செல்ஃபோன் இல்லாமல் உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு அடுத்து வரும்போது இலவசமாக பீட்சா வழங்கப்படும். வேண்டுமென்றால் அவர்கள் கையோடு வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம்.

மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா - விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...