Home /News /international /

Naked crepe: ஏன்பா.. தோசைக்கு இது தான் பெயரா? அதுக்கு இவ்வளவு விலையா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

Naked crepe: ஏன்பா.. தோசைக்கு இது தான் பெயரா? அதுக்கு இவ்வளவு விலையா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில், தென்னிந்திய உணவுகளின் பெயர்களை மாற்றியதோடு, அதனை அதிக விலைக்கும் விற்பனையும் செய்துவருகின்றனர். 

  இந்தியர்களின் உணவு முறையும் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் தான் மற்ற நாடுகளுக்கு முன்உதாரணமாக விளங்கிவருகிறது. அதிலும் மருத்துவக்குணங்கள் நிறைந்த தென்னிந்தியர்களின் உணவுகளை அடித்துக்கொல்வதற்கு யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். குறிப்பாக வெளிநாட்டினர் இங்கு வந்தாலும் இட்லி, தோசை, சாம்பாரை சுவைக்காமல் செல்ல மாட்டார்கள்.. அந்தளவிற்கு அதன் உணவின் சுவை அவர்களைக் கவர்ந்திருக்கும். இதுப்போன்ற நிலையில் தான், வெளிநாட்டிலும் இந்தியர்களின் உணவுகள் கிடைக்கும் வகையிலான ஹோட்டல்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

  அப்படித்தான், அமெரிக்காவில் சியட்டிலில் உள்ள Indian crepe co என்ற உணவகத்தில் இந்திய உணவுகள் அதிலும் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த உணவான இட்லி,தோசை, சாம்பார் வடை போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உணவகத்தின் மெனு கார்டில் உள்ள பெயர்கள் தான் இந்தியர்களை முகம் சுளிக்க வைத்ததோடு பல்வேறு விவாதத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. அப்படி என்ன தான்பெயர் வைத்தார்கள்? என நாமும் இங்கே தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

  dhosa pasiparuppu dosa recipe tamil breakfast recipes videos
  பாசிப்பருப்பு தோசை


  Indian crepe co தனது மெனு கார்டில், சாம்பார் இட்லி - Dunked Rice Cake Delight, சாதா தோசை - Naked Crepe, மசால் தோசை - Smashed Potato Crepe, சாம்பார் வடை - Dunked Doughnut Delight என பெயர்களை மாற்றியுள்ளது. கேட்பதற்கு புதுமையாக இருந்தாலும் இந்தியர்களால் கூறவே முடியாத அளவிற்கு பெயர்கள் அமைந்துள்ளது.

  Also Read : பஃபேயில் சாப்பிட்ட பெண்ணுக்கு இரண்டு மடங்கு பில் கட்ட சொன்ன ரெஸ்டாரண்ட் - ஏன் தெரியுமா.?

  இதோடு மட்டுமில்லாமல், உருளைக்கிழங்கு க்ரீப் ரூ.1491க்கும் ( $18.69), நேக்கட் க்ரீப் ரூபாய் ரூ. 1,404 க்கும் ( $17.59), டங்க்ட் டோனட் டிலைட் ரூ.1316 க்கும் ( $16.49) என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள்.. இது என்ன புதுசா இருக்கு? உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நாம் பீட்சாவை பீட்சா என்று தான் கூறுகிறோம். இதற்கு வேறு எந்தப்பெயர்களையும் நாம் வைக்கவில்லை ஏன் தோசையை தோசை என்றே கூறலாமே? என டிவிட் செய்துள்ளனர்.

  மேலும் இந்திய உணவுகளுக்கு பெயர்களை மாற்றியுள்ளது சரியானது தான் என ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மற்றொரு ட்விட் யூசர் ஒருவர் தெரிவித்துள்ளார். நம்முடைய சாதாரண உணவுகளின் பெயர்களை மாற்றியதாக இணையத்தில் வெளியான தகவல், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் 2,515க்கும் மேற்பட்ட ரீட்விட்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தான், இதற்குப்பதிலளிக்கும் விதமாக மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர் தன்னுடைய பதிவில், தென்னிந்திய உணவுகளின் பெயர்கள் அமெரிக்கர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதால் தான் இதற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். என்னதான் இப்படி உணவு பொருள்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இத்தனை ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது என்றும், நாமே அமெரிக்காவில் சிறிய உணவகத்தை ஆரம்பித்துவிடலாம் என தோன்றுவதாகவும் கலாய்க்கும் வகையிலான மெசேஜ்களையும் ட்விட் செய்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: America, United States of America

  அடுத்த செய்தி