ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கியூபா ஆதரவாக உள்ளது. இதேப்போல் சீனாவும் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு துணை நிற்கின்றன. ரஷ்யாவுக்கு வட கொரியாவும் ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை ஈரான் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது.
இதேபோல அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உக்ரைனை ஆதரிக்கின்றன.
Must Read : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு தள்ளுபடி
இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
Read More : உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா திடீர் அறிவிப்பால் திருப்பம்!
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தியா இருதரப்பிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் :
https://nrtamils.tn.gov.in
Facebook :
https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @
tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.