Home /News /international /

10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

Corona virus

Corona virus

48 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலி எண்ணிக்கையும் 2,000ஐ நெருங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் சொல்லமுடியாத துயரில் சிக்கித்தவித்து வருகின்றன. கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது., தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.

    Also read:  Omicron | மெட்ரோ நகரங்களில் ஏற்படும் பாதிப்புகளில் 75% ஓமைக்ரான் தான் - மூத்த விஞ்ஞானி

    உலக அளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக திகழும் அமெரிக்காவில் சமீபத்திய வாரங்களில் குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகவே லட்சங்களில் பதிவாகி வருகின்றன.



    அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,012,899 பேருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,909 பேர் அங்கு ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

    Also read:   அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி

    48 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் 1.04 லட்சம் பேர் அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 20,000 பேர் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது வீட்டு தனிமையில் இருந்து வருகிறார்.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி