நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!

அப்பட்டியலில் நீடிக்கத் தேவைப்படும் முக்கிய அம்சங்கள் இல்லாத காரணத்தால் இந்தியாவையும் ஸ்விட்சர்லாந்தையும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News18 Tamil
Updated: May 29, 2019, 2:45 PM IST
நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!
மாதிரிப்படம்
News18 Tamil
Updated: May 29, 2019, 2:45 PM IST
அமெரிக்காவின் நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்குவதாக அமெரிக்கக் கருவூலத் துறை அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாணய மதிப்பைக் கொண்ட நாடுகளை இணைத்து நாணய கண்காணிப்புப் பட்டியலை அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவின் நாணய மதிப்பு சர்வதேச அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவை அப்பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.

ஆனால், தற்போது அப்பட்டியலில் நீடிக்கத் தேவைப்படும் முக்கிய அம்சங்கள் இல்லாத காரணத்தால் இந்தியாவையும் ஸ்விட்சர்லாந்தையும் நீக்குவதாக அமெரிக்காவின் கருவூலத்துறை 40 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இப்படியலில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பார்க்க: லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வடகொரியாவில் வாழ முடியும்- ஐ.நா
First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...