அமெரிக்காவில் ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்: ஆளுநர்களிடம் கடிந்து கொண்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆறாவது நாளாக போராட்டங்கள் தொடரும் நிலையில், ஆளுநர்களிடம் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். 

அமெரிக்காவில் ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்: ஆளுநர்களிடம் கடிந்து கொண்ட ட்ரம்ப்
அமெரிக்கப் போராட்டம்
  • Share this:
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட், காவல்துறை கைது நடவடிக்கையின்போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆறாவது நாளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கருப்பின மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமாக எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து மினபொலிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் இதேபோன்று நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர். இதையடுத்து, போராட்டத்தை முன்னெடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேவேளையில், புரூக்ளின் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, போலீசார் விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் வன்முறை வெடித்தது.


கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் போர்க்களமானது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெள்ளைமாளிகை முன்னர் திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறைக்கு அதிபர் ட்ரம்ப் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு சுரங்க அறையில் சுமார் ஒரு மணி நேரம் ட்ரம்ப் தங்கவைக்கப்பட்டார் என்று குறிப்பிட்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆறு நாள்களாக போராட்டம் தொடர்ந்துவருகிறது.

மாகாண ஆளுநர்களைத் தொடர்பு கொண்ட டொனால்ட் ட்ரம்ப், ‘போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்குகிறீர்கள். போராட்டக்காரர்கள் உங்களைக் கடந்து ஆட்சி செய்கிறார்கள்’ என்று கடிந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading