சமூகத்தில் வெறுப்பையும், பிளவையும் டிரம்ப் தூண்டுகிறார் - ஜோ பைடன்

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறைகள் அதிகரிக்க பலவீனமான அதிபரே காரணம் என ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

சமூகத்தில் வெறுப்பையும், பிளவையும் டிரம்ப் தூண்டுகிறார் - ஜோ பைடன்
ஜோ பைடன் | டிரம்ப்
  • Share this:
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கான வேட்பாளர்களான டிரம்பும், பைடனும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நிகழும் வன்முறைகள் தேர்தல் பரப்புரையின் மையமாக மாறியுள்ளது.

கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தை நெரித்து காவல் அதிகாரி கொன்றதை கண்டித்து கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஃபிளாய்ட் கொலைக்கு எதிரான போராட்டங்களை பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற அமைப்பு முன்னெடுத்து வருகிறது.  இந்த அமைப்பை கண்டித்து போர்ட்லேண்ட் நகரில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்ட்லேண்டை நிர்வகிக்கும் ஜனநாயகக் கட்சியின் மேயரால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும்  ஜோ பைடனும், அவரது கட்சியும் வன்முறையை விரும்புவதாகவும் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் சாடியுள்ளார்.  இந்நிலையில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.  சமூகத்தில் வெறுப்பையும், பிளவையும் டிரம்ப் தூண்டுவதாகவும் பைடன் புகார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க... மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி - விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என டிரம்ப் அறிவிப்பு

போர்ட்லேண்ட் வன்முறை டிரம்பின் மேற்பார்வையில் நடைபெற்றவதாகவும், டிரம்பின் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்றும் பைடன் தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களின் வன்முறையை தடுக்கத் தவறியது டிரம்ப் எவ்வளவு பலவீனமான அதிபர் என்பதையே காட்டுவதாகவும் பைடன் கூறியுள்ளார்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading