ரூ.344.61 கோடி கேட்டு கூகுள் நிறுவனம் மீது இந்திய வம்சாவளி எம்.பி வழக்கு!

news18
Updated: July 27, 2019, 9:41 AM IST
ரூ.344.61 கோடி கேட்டு கூகுள் நிறுவனம் மீது இந்திய வம்சாவளி எம்.பி வழக்கு!
துளசி கப்பார்ட்
news18
Updated: July 27, 2019, 9:41 AM IST
விளம்பர கணக்கு முடக்கப்பட்டதற்காக கூகுள் நிறுவனம் மீது இந்திய வம்சாவளி அமெரிக்க பெண் எம்.பி துளசி கப்பார்ட், சுமார் 344.61 கோடி ரூபாய் இழப்பீடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பார்ட், அந்நாட்டு எம்.பி.யாக தேர்வான முதல் இந்து பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதி திரட்டியும் வருகிறார். துளசி கப்பார்ட்டின் பிரசாரம் குறித்த தகவல்களை விளம்பரப்படுத்துவதற்காக அவரது பிரசாரக் குழு கூகுளில் விளம்பர கணக்கு ஒன்றை தொடங்கி நிர்வகித்து வந்தது.

இந்த விளம்பர கணக்கை கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூகுள் நிறுவனம் முடக்கியதாக கூறப்படுகிறது. தகுந்த காரணம் இன்றியும், எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் விளம்பர கணக்கு முடக்கப்பட்டதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.344 கோடியே 61 லட்சத்து 75 ஆயிரம்) இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்தின் மீது துளசி கப்பார்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...