Home /News /international /

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

US President Joe Biden: சீன அதிபர் ஜி ஜின்பிங்-குடன் காணொலி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளியன்று உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

உக்ரைனில் நடைபெறும் போரால் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் வியாழனன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு மற்றும் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பங்கேற்க உள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். இதன் பிறகு வெள்ளியன்று போலந்து தலைநகர் வார்சாவுக்குச் செல்லும் அவர், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையும் படிங்க - உக்ரைன் மீதான போரில் இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு - ஐ.நா. சபை தகவல்!
உக்ரைனில் நிலவும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடி நிலை குறித்து பைடன் ஆலோசனை மேற்கொள்வார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புகளுக்கு முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருடன் இன்று பைடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று முன்தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்-குடன் காணொலி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க - பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து... மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை
 சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் போரை சீனா விரும்பவில்லை என்றும் உலக நாடுகள் எந்தப் பிரச்சனையையும் நேரில் சந்தித்துப் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி