Home /News /international /

அமெரிக்க அதிபரை விடாமல் துரத்தும் கொரோனா.. 10 நாட்களில் 2வது முறையாக கோவிட் பாதிப்பு

அமெரிக்க அதிபரை விடாமல் துரத்தும் கொரோனா.. 10 நாட்களில் 2வது முறையாக கோவிட் பாதிப்பு

ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட்

ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட்

ஜோ பைடனுக்கு முன்னதாக ஜூலை 21 ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கூடிய கோவிட் பாதிப்பு உறுதியானது.

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை  தனிமைப்படுத்தியுள்ளார். முன்னதாக ஜோ பைடனுக்கு ஜூலை 21 ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கூடிய கோவிட் பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், ஒரு வாரத்திலேயே அவர் உடல் நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதனால் அவர் தனிமையில் இருந்து வெளியேறி வழக்கமான பணிகளை செய்யலாம் என மருத்துவர்கள் கூறினர்.

    தொடர்ந்து அவர் சீனா அதிபர் ஜி ஜிங்பிங்குடன் தொலைப்பேசி வாயிலாக முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதில் தைவான் விவகாரம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.ஜோ பைடன் பதவியேற்ற பின் இரு நாட்டு தலைவர்களும் இதுவரை நேரடி சந்திப்பில் ஈடுபடாத நிலையில், விரைவில் ஒரு நேரடி சந்திப்பு நடத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோ பைடனுக்கு நேற்று மீண்டும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. இது தொடர்பாக அதிபரின் பிரத்தியேக மருத்துவர் கேவின் ஓ கன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிபருக்கு சிகிச்சைகள் ஏதும் தர வேண்டிய தேவை தற்போது இல்லை. பாதிப்பில் இருந்து மீண்டு வருவதால் இது போன்ற மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். எனவே, அவரை கூர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றுள்ளார்.

    தனக்கு இரண்டாவது முறை பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஜோ பைடன் ட்விட்டரில் காணொலி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘எனக்கு மீண்டும் பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. நான் நலமாகத்தான் உள்ளேன். இருப்பினும் மற்றவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு நான் வீட்டில் இருந்தே பணியாற்றவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.


    அமெரிக்காவில் உருமாறி கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகம் காணப்படுகிறது. தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு பதிவாகும் நிலையில், தொற்றின் தீவிரத்தன்மை குறைவாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் சுமார் 39 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பிய ஹேக்கர்.. துணிவுடன் எதிர்கொண்டு தண்டனை வாங்கித் தந்த பெண்!

    இந்த சூழலில் அங்கு குரங்கம்மை தொற்று பரவலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகி வருவதால் பல்வேறு மாகாணங்களில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Covid-19, Joe biden, USA

    அடுத்த செய்தி