ஹோம் /நியூஸ் /உலகம் /

''பாகிஸ்தான்தான் மிக ஆபத்தான நாடு..'' அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சலசலப்பு

''பாகிஸ்தான்தான் மிக ஆபத்தான நாடு..'' அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சலசலப்பு

பாகிஸ்தானை மிகுந்த ஆபத்தான நாடு என்ற ஜோ பைடன்

பாகிஸ்தானை மிகுந்த ஆபத்தான நாடு என்ற ஜோ பைடன்

ஜோ பைடன் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaWashingtonWashington

  உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டின் வாஷிங்டன் நகரில் ஜனநாயக கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் சர்வதேச அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார்.

  அப்போது அவர் பேசுகையில், ஜி ஜிங்பிங் தனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆனால், அதை செயல்படுத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம். ரஷ்யாவில் நிலவும் சூழலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம். மேலும் எனது எண்ணப்படி, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான். அந்நாட்டில் தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க அதிபரின் இந்த கருத்து சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில்,ஜோ பைடன் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

  அதில் அவர் கூறியதாவது, "இதை நான் தெளிவுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தான் ஒரு பொறுப்புமிக்க அணு ஆயுத நாடாகும். சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பு விதிகளின் படியே எங்கள் அணு சக்திகள் உள்ளன. மிகவும் கவனத்துடன் அணு பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறோம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: இனவெறி கொடூரம்.. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு 11 முறை கத்தி குத்து..உயிருக்கு போராட்டம்

  ரஷ்ய-உக்ரைனன் போரில் தேவைப்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பகீர் எச்சரிக்கைகளையும் அவ்வப்போது விடுத்து வருகிறார்.இந்த சூழலில் உலக நாடுகள் மத்தியில் அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ள வேளையில் பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Joe biden, Nuclear, USA