முகப்பு /செய்தி /உலகம் / எதிர்பார்க்காத விசிட்... உக்ரைன் விரைந்த அமெரிக்க அதிபர் பைடன் - காரணம் இதுதான்!

எதிர்பார்க்காத விசிட்... உக்ரைன் விரைந்த அமெரிக்க அதிபர் பைடன் - காரணம் இதுதான்!

ஜோ பைடன்

ஜோ பைடன்

உக்ரைனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ள பைடன், புதின் மற்றும் அவரது படைகள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேட்டோ அமைப்பில் சேருவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. இதில், உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போர் புரிகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான போர் ஓராண்டை எட்ட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து தனது ஆதரவை பைடன் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு, தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த கிவ் நகருக்கு சென்றதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உக்ரைனை பாதுகாக்க அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலான நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியதாகவும், அந்த ஆதரவு நிலைத்திருக்கும் என்றும் பைடன் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ள பைடன், புதின் மற்றும் அவரது படைகள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Joe biden, Russia - Ukraine