ஹோம் /நியூஸ் /உலகம் /

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்.. ஜோ பைடன் எச்சரிக்கை

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்.. ஜோ பைடன் எச்சரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜோ பைடன்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜோ பைடன்

அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் ஜோ பைடன் நேற்று பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inte, IndiaWashingtonWashingtonWashingtonWashington

  2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலக நாடுகள் முழுவதும் கோவிட் பாதிப்பால் முடங்கிய நிலையில், இந்தாண்டு தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தடுப்பூசி முக்கிய பங்காற்றியது.

  இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தாண்டும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவை அதிகம் பாதித்த நிலையில், அந்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியில் அரசு கவனம் காட்டி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இருப்பினும் இது அந்நாட்டின் மக்கள் தொகை வீதத்தில் மிகக் குறைவாகும்.

  வயது வந்தோரில் 5இல் ஒருவர் மட்டுமே கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அந்நாட்டில் குளிர் காலம் தொடங்கவுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அதிபர் ஜோ பைடன் நேற்று பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே, பழைய தடுப்பூசி டோஸ்கள் முழு பலன் அளிக்காது என்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியமாகும்.

  இதையும் படிங்க: உருகும் பனிப்பாறைகள்.. வெளிவரும் படிந்துபோன வைரஸ்கள்... மீண்டும் தொற்று நோய்? அதிர்ச்சி ரிப்போர்ட்

  அமெரிக்காவில் மிகக்குறைவான மக்களே பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளனர். விரைவில் குளிர்காலம் வேறு வரவுள்ளதால், மக்கள் வீட்டுக்குள் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் வரும். இது கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பை அதிகரிக்கும். தற்போதை நாள்தோறும் சராசரியாக 400 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். எனவே, மக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக பூஸ்டர் டோஸ் செலுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என ஜோ பைடன் கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Joe biden