• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவில் 1 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு மசோதா.. அதிபர் பைடன் திட்டத்துக்கு கிடைத்தது ஒப்புதல்

அமெரிக்காவில் 1 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு மசோதா.. அதிபர் பைடன் திட்டத்துக்கு கிடைத்தது ஒப்புதல்

அமெரிக்காவில் 1 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு மசோதா.. அதிபர் பைடன் திட்டத்துக்கு கிடைத்தது ஒப்புதல்

அமெரிக்காவில் 1 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு மசோதா.. அதிபர் பைடன் திட்டத்துக்கு கிடைத்தது ஒப்புதல்

அமெரிக்காவில் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கட்டமைப்பு மசோதாவுக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது அதிபர் பைடனுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

  • Share this:
    அமெரிக்காவில் கட்டமைப்புகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை முன்மொழிந்தார். கடந்த ஆக்ஸ்ட் மாதம், செனட் சபையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த மசோதா பிரநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

    கட்டமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 228 வாக்குகளும், எதிராக 206 வாக்குகளும் பதிவாகின. மசோதாவுக்கு ஆதரவாக 13 குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். ஆனால், பைடன் கட்சியைச் சேர்ந்த 6 பேர், மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 19 பேர் மசோதாவுக்கு ஆதரவாக நின்றனர். இதனால், இருதரப்பு உள்கட்டமைப்பு மசோதா என்று அழைக்கப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    தற்போது, நியூயார்க்கின் அலெக்ஸாண்டிரியா, ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் மின்னசோட்டாவின் இல்ஹான் ஓமர் உட்பட ஆறு ஜனநாயகக் கட்சியினர் எதிராக வாக்களித்தனர். இருதரப்பு மசோதா என அழைப்பதற்காக முக்கிய கொள்கைகள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அது அதிபர் பைடனின் கையெழுத்திற்காக வைக்கப்படும்.

    1 லட்சம் கோடி அமெரிக்க டாலரில் 55 ஆயிரம் கோடி டாலர்கள், நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்த அடுத்த 8 ஆண்டுகளில் செலவு செய்யப்படும். மேலும், சுகாதாரமான குடிநீர், வேகமான இணையதள வசதி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு நாடு முழுவதும், சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். சில தசாப்தங்களுக்குப் பிறகு கட்டமைப்பு வசதிக்காக இவ்வளவு பெரிய தொகை அளிக்கப்படுகிறது.

    மசோதா நிறைவேறிய பிறகு கருத்து தெரிவித்துள்ள அதிபர் பைடன், ஒரு தேசமாக மகத்தான படியை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார். 21-ஆம் நூற்றாண்டிற்கான சிறந்த பொருளாதார நாடுகளுக்கான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற இந்த முன்னெடுப்பு அடித்தளமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: