மைக் ஆப் ஆனதாக நினைத்து நிருபரை கடுமையாக திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மைக் ஆப் ஆனதாக நினைத்து நிருபரை கடுமையாக திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இதே ஜோ பைடன் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார், அப்போது அவருடைய நிர்வாகத்தின் உறுப்பினர்களிடையே எந்த அவமரியாதையும் இருந்தால் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதியளித்தார், ஆனால் இன்று அவரே அவமரியாதையாக ஒரு பத்திரிகையாளரை சாடினார்.
வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிருபரை அசிங்கமாகத் திட்டியது மைக்கில் கேட்டு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நுகர்வோர் விலைகள் டிசம்பரில் திடமாக அதிகரித்தன, இதனால் பணவீக்கம் அதிகரித்தது. இது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் காலக்கட்டத்தில் பணவீக்கத்தில் மிகப்பெரிய வருடாந்திர உயர்வு ஆகும், இது உச்சமாகும்.
இதைத்தான் அந்த நிருபர் பைடனிடம் கேள்வி எழுப்பினார், பணவீக்கம் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்றார். பைடனின் காம்படிஷன் கவுன்சில் கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டபோது, வெள்ளை மாளிகை நிருபர் பீட்டர் டூசி, பணவீக்கம் பற்றி கேட்பது சரியா என்றும் அது அரசியல் கடன் தானா என்றும் கேட்டார்.
பணவீக்கம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன் ” “பணவீக்கம் ஒரு பெரிய சொத்து, அதிக பணவீக்கம் அதிக சொத்து,” என்று கேலியாக பதிலளித்தார். மேலும் அவர் பேசும்போது அவருடைய மைக்ரோஃபோன் இன்னும் இயக்கத்தில் இருப்பதை உணராமல், ‘முட்டாள், சன் ஆஃப் எ பிட்ச்’ ("What a stupid son of a bitch,") என்று திட்டியதும் அனைவருக்கும் கேட்டது.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்த ஒரு மணி நேரத்திற்குள், அதிபர் பைடன், டூசியை செல்போனில் அழைத்து, “நண்பரே தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று மன்னிப்புக் கேட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹன்னிட்டியிடம் டூசி கூறினார்.
இதே ஜோ பைடன் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார், அப்போது அவருடைய நிர்வாகத்தின் உறுப்பினர்களிடையே எந்த அவமரியாதையும் இருந்தால் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதியளித்தார், ஆனால் இன்று அவரே அவமரியாதையாக ஒரு பத்திரிகையாளரை சாடினார்.
அப்போது இருந்த பைடன் இப்படிக் கூறினார், “நீங்கள் என்னுடன் பணிபுரிந்தால், நீங்கள் மற்றொரு சக ஊழியரை அவமரியாதையுடன் நடத்துவதை நான் கேட்டால், நான் உங்களை அந்த இடத்திலேயே பணிநீக்கம் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். யாராக இருந்தாலும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு” என்று அவர் அப்போது கூறினார்.
ஜோ பைடனின் முன்னோடியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலரின் மகிழ்ச்சிக்கு இணங்க நிருபர்களை தாக்கிப் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொன்று என்னவெனில் டூசியை அடிக்கடி அதிபர் மாளிகை அழைத்து அவர் தொடர்பான நிகழ்ச்சிகளை கவர் செய்ய வைக்கும், ஆனால் அப்போதெல்லாம் கூட நெருக்கடியான கேள்விகளை எழுப்பியுள்ளார் டூசி. ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஒரு பாரம்பர்ய மனநிலை, அது சார்ந்த கட்சியுடன் தொடர்புடையது என்பதால் பைடனின் ஜனநாயகக் கட்சி குறித்து விமர்சனங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.