அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் ஜோ பைடனுக்கான ஆதரவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதற்கு பைடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸ் குறித்து அதிகளவில் நேர்மறையான கருத்துகள் நிலவுவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சிஎன்என் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 2003ஆம் ஆண்டுக்கு பின் 53 விழுக்காடு வாக்காளர்கள் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக பைடன், கமலா ஹாரீஸ் அணிக்கு 50 விழுக்காடு ஆதரவு உள்ளதும், டிரம்பின் அணிக்கு 46 விழுக்காடு ஆதரவு உள்ளதும் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையிலான 4 விழுக்காடு வாக்கு வித்தியாசம் தேர்தல் நெருங்கும் போது எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடுமையான போட்டி நிலவும் 15 மாகாணங்களில் பைடனுக்கு 49 விழுக்காடு ஆதரவும், டிரம்பிற்கு 48 விழுக்காடு ஆதரவும் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த 15 மாகாணங்களில் கடந்த தேர்தலில் டிரம்ப் 10 மாகாணங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
படிக்க: மோசமடைகிறதா நிலைமை? - 10 மடங்கு வேகமாக தொற்றும் புதிய கொரோனா வைரஸ் வகையைக் கண்டறிந்தது மலேசியா..
படிக்க: திடீரென ஏற்பட்ட மரணம் - கதறி அழுத ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை
நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் போது டிரம்பின் ஆதரவாளர்களில் 12 விழுக்காட்டினரும், பைடன் ஆதரவாளர்களில் 7 விழுக்காட்டினரும் மனம் மாற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. டிரம்ப் மீது நிலவும் அதிருப்தி தேர்தலில் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது. டிரம்ப்பிற்காக வாக்களிப்போம் என 30 விழுக்காட்டினர் தெரிவிக்கும் நிலையில், 29 விழுக்காட்டினர் டிரம்ப் எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து பைடனுக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பைடன் ஆதரவு வாக்குகளுடன், டிரம்ப் எதிர்ப்பு வாக்குகளும் இணையும் போது பைடன் எளிதில் வெற்றி பெறுவார் என கணிக்கப்படுகிறது.
அதிபர் பதவியில் டிரம்பின் செயல்பாடுகளுக்கு 42 விழுக்காட்டினர் ஆதரவாகவும், 54 விழுக்காட்டினர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். டிரம்ப் ஆதரவு என்ற பிரிவில் 55 விழுக்காட்டினர் அவருக்கு எதிராகவும், 43 விழுக்காட்டினர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். இவ்வாறு டிரம்ப் மற்றும் பைடன் இடையிலான வித்தியாசம் குறைவாகவே இருப்பதால், தேர்தல் நெருங்கும் போது போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, USA