வன்முறையை தூண்டும் பதிவுகள்... நிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் ட்விட்டர் கணக்கு
@TeamTrump என்ற பிரச்சாரக் கணக்கிலிருந்தும் டிரம்ப் ட்வீட் செய்தார். அதுவும் விரைவிலேயே முடக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
- News18 Tamil
- Last Updated: January 9, 2021, 11:06 AM IST
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது கருத்துகள் இருந்ததால், கணக்கை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது.
அங்கிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர். தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் கலவரத்தைத் தூண்டிய டிரம்புக்கு உலகளவில் கண்டனங்கள் வலுத்தது. இந்த சம்பவத்தை அடுத்து தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசி அந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் வெளியிட்டார் டிரம்ப். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் டிரம்பின் அந்த பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி, அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த டிரம்ப், ட்விட்டர் நிறுவனம் "தீவிர இடதுசாரிகளுக்கு" ஆதரவாக இருப்பதாகக் கூறி ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்தார். சில நிமிடங்களில் அந்த ட்வீட்களையும் ட்விட்டர் நீக்கியது.
பின்னர் @TeamTrump என்ற பிரச்சாரக் கணக்கிலிருந்தும் டிரம்ப் ட்வீட் செய்தார். அதுவும் விரைவிலேயே முடக்கப்பட்டது. "முடக்கத்தைத் தவிர்க்க மற்றொரு கணக்கைப் பயன்படுத்துவது எங்கள் விதிகளுக்கு எதிரானது" என்று ட்விட்டர் இதற்கு விளக்கமளித்துள்ளது. உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டு அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது இதுவே முதல் முறை.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது.
அங்கிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர். தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் கலவரத்தைத் தூண்டிய டிரம்புக்கு உலகளவில் கண்டனங்கள் வலுத்தது.