கிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு

கிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு
டிரம்ப்
  • Share this:
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் டிரம்ப், பிரதமர் மோடியுடன் இணைது மோதேரா மைதானத்தை பார்வையிட உள்ளது மட்டுமே உண்மை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நிகழ்விற்கு சச்சின், கபில்தேவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்தை நிச்சயமாக ஒரு இந்தியர்தான் திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading