ஹோம் /நியூஸ் /உலகம் /

குடியரசு தின விழாவுக்கு மோடியின் அழைப்பை நிராகரித்த டிரம்ப்

குடியரசு தின விழாவுக்கு மோடியின் அழைப்பை நிராகரித்த டிரம்ப்

இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Trump Can’t Come Due to Scheduling Constraints: White House Response to India’s Republic Day Invite. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக அழைப்பை நிராகரித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதேபோல அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வருமாறு அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

ஆனால் டிரம்ப் இந்தியா வர மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் நல்லுறவு வைத்துள்ளதாகவும், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Donald Trump, PM Narendra Modi