காப்பாற்றியது ’செனட்’... பதவியை தக்கவைத்த ட்ரம்ப்...!

காப்பாற்றியது ’செனட்’... பதவியை தக்கவைத்த ட்ரம்ப்...!
அதிபர் டிரம்ப்
  • News18
  • Last Updated: February 6, 2020, 9:17 AM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப்-ஐ தகுதி நீக்கும் செய்யும் தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டதால், ட்ரம்பின் பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக பல கட்ட விசாரணை நடந்த நிலையில் ட்ரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணையும் நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததையடுத்து ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அவர் செனட் சபையை அதிகம் நம்பியிருந்தார்.


ஏனெனில், செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை அதிகம். இந்த நிலையில், பதவி நீக்கத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் நடந்தது. அங்கு குடியரசுக்கட்சியினர் பெரும்பான்மை வகிப்பதால், இந்த தீர்மானம் எளிதாக தோற்கடிக்கப்பட்டது. 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading