முகப்பு /செய்தி /உலகம் / ஒரே பாலின திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஒரே பாலின திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஒரே பாலினத் திருமணம், இனங்களுக்கிடையேயான திருமணங்களை சட்டபூர்வமாகிய அமெரிக்கா!

ஒரே பாலினத் திருமணம், இனங்களுக்கிடையேயான திருமணங்களை சட்டபூர்வமாகிய அமெரிக்கா!

அமெரிக்கா சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய படியை எடுக்கிறது, அனைத்து மக்களின் சுதந்திரம் மற்றும் நீதிக்காக, இது கொண்டுவரப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  டிசம்பர் 13 ஆம் தேதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரே  பாலின திருமணம், இனங்களுக்கிடையேயான திருமணங்களுக்கான கூட்டாட்சி பாதுகாப்பு வழங்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார். 

ஒரே பாலின உறவுகளை சில ஆண்டுகளாக உலக நாடுகள்,  முக்கியமாக மேற்கத்திய நாடுகள் சட்டபூர்வமாக ஆதாரித்து, அங்கீகரித்து வருகின்றன. LGBTQ+ சமூகத்தினரை அவர்களது இயற்கையான இயல்புகளை மற்றவர்கள் புரிந்து அவர்களை அப்படியே ஏற்கும் மனநிலை இப்போது பரவலாக உணர முடிகிறது.

இந்தியாவிலேயே சமீபத்தில் சில ஒரே பாலின திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை சட்டப்படி செல்லும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க தற்போது இதை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இதையும் படிங்க: 1970-களில் தயாரித்த உக்ரைன் ஆயுதங்களால் உக்ரைனைத் தாக்கும் ரஷ்யா..!

ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்கும்  முன்னர் இருந்தே  ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தார். 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே, நாடு முழுவதும் அத்தகைய திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரே பாலின சங்கங்களை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அமெரிக்கா சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய படியை எடுக்கிறது, அனைத்து மக்களின் சுதந்திரம் மற்றும் நீதிக்காக, இது கொண்டுவரப்பட்டது ," என்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரே  பாலின திருமணம்  சட்டம் ஒப்புதல் தரும் விழாவில் அவர் கூறினார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் இப்போது பெரும்பான்மையான பழமைவாத சார்ந்த நீதிபதிகள் உள்ளனர். அவர்களால் கடந்த ஜூன் மாதம் கருக்கலைப்பு உரிமைகள் மீதான  தீர்ப்பை ரத்து செய்யப்பட்டது.  இப்போதும் இடது மற்றும் வலதுசாரி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ஒரே பாலின திருமண உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கையையும் தடுத்து வந்தனர்.

இதையும் படிங்க: 'ரகசிய குழு'.. ட்விட்டரில் இவ்வளவு விஷயம் நடந்ததா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

ஆனால் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜோ பைடன், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், தன வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் அரசாங்கம் இந்தத் தலையீடும் செய்யக்கூடாது. அது சரியாக இருக்காது என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பைடனுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆண்டு இறுதி அமர்வின் போது இந்த சட்டத்தை  அமல்படுத்த ஆர்வமாக இருந்தனர்.

அடுத்த ஆண்டு  ஜனவரியில் பாராளுமன்றத்தைக் குடியரசுக் கட்சியினர் கட்டுப்படுத்துவார்கள், அப்போது அவர்கள் இப்போது இயற்றிய ஒரே பாலின ஜோடிகளுக்கான உரிமைகளை மாற்றியமைக்கலாம் என்று ஜனநாயகக் கட்சியினர் கவலை தெரிவித்தனர். இருப்பினும் தற்போது இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.

First published:

Tags: Joe biden, LGBT, USA