குத்துச்சண்டை வீரர் போல் தன்னை சித்தரித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்..!

குத்துச்சண்டை வீரர் போல் தன்னை சித்தரித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்..!
டிரம்ப்
  • News18
  • Last Updated: November 28, 2019, 11:42 AM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி பால்போவாவை போல சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் நேற்று இரவு பதிவிட்ட இந்த புகைப்படம் உலக அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகர் சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் குத்து சண்டை வீரரான ராக்கி பால்போவாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்தார்.  அந்த ராக்கி படத்தின் போஸ்டரில்  சில்வஸ்ட்டர்  கட்டுக்கோப்பான உடலோடு கம்பீரமாக நின்றிருப்பார். அந்த போஸ்டரில் உடலோடு தன் தலையைப் பொருத்திய படத்தை ட்விட்டரின் பதிவு செய்துள்ளார்.


ட்விட்டரில் டிரம்பின் ஆதரவாளர்கள் நேர்மறையாகவும், எதிர்ப்பாளர்கள் எதிர்மறையாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னாள் WWE வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்