• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வீட்டில் தீ பற்றி எரிந்த போதும் தடுக்காமல் ஃபேஸ்புக் லைவ்வில் மதப்பிரச்சாரம் செய்த நபர்..

வீட்டில் தீ பற்றி எரிந்த போதும் தடுக்காமல் ஃபேஸ்புக் லைவ்வில் மதப்பிரச்சாரம் செய்த நபர்..

Sammy Smith, founder of Grace Cathedral Ministries

Sammy Smith, founder of Grace Cathedral Ministries

கடவுள் நம்பிக்கை இருப்பது அவரவர் விருப்பம். ஆனால், அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்பதை இவரின் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

  • Share this:
சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் பலவித புகைப்படங்கள், வீடியோக்கள், மீம்கள் வைரலாவது வழக்கம். அவற்றில் சில உண்மையிலையே நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் சில நமக்கு அதிர்ச்சியை தரும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் ஃபேஸ்புக்கில் வைரலாகி உள்ளது. இதை பார்த்த பல நெட்டிசன்கள் ஏன் இப்படியொரு விஷயத்தை செய்கிறார்கள் என்கிற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா நகரில் வசித்து வரும் சமி ஸ்மித் என்பவர் ஒரு மத பரப்புரையாளர். இவர் கிரேஸ் கத்திடரல் மினிஸ்டரிஸ் என்கிற மத பரப்புரை அமைப்பின் நிறுவனரும் ஆவார். சமீபத்தில் இவர் ஃபேஸ்புக் லைவ் வந்துள்ளார். இதில் அவர் நேரலையாக காட்டிய காட்சி பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அந்த லைவ்வில் தனது வீடு எரிந்து கொண்டு இருக்கும் காட்சியை அப்படியே காட்டியுள்ளார். மேலும் இதை வைத்து கடவுளின் பேரில் மத போதனை செய்துள்ளார். அந்த லைவ்வில் "என் வீட்டில் நெருப்பு பற்றியுள்ளது. என் வீட்டில் நெருப்பு பற்றியுள்ளது", என பல முறை இதையே சொல்லி உள்ளார்.

Also read:  NoroVirus: வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு: கேரளாவுக்கு அடுத்த அதிர்ச்சி..

மேலும் இவர் லைவ்வில் வந்தபோது அந்த வீடு முழுவதும் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. அதை அணைக்க சில தீயணைப்பு வீரர்கள் போராடி வந்துள்ளனர். இந்த காட்சிகளை பலரும் ஃபேஸ்புக் லைவ் மூலம் பார்த்து வந்தனர். அப்போது "பாருங்கள் இது முழுவதுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் பார்ப்பதை போலவே நீங்களும் இதை ஃபேஸ்புக் லைவ் மூலம் பார்த்து வருகிறீர்கள்" என்று அதில் கூறியுள்ளார்.

அவரின் வீட்டில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் பொது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீ அதிகமாக பரவாமல் இருக்க உதவி உள்ளனர். இதையும் அவர் லைவ்வில் காட்டியுள்ளார். தீயை முழுவதுமாக அணைத்தவுடன் "நல்ல வேளை இங்குள்ள யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, உயிருக்கும் ஆபத்து உண்டாகவில்லை" என்று கூறியுள்ளார். ஆனால் அவரின் வீடு முழுவதுமாக தீ விபத்தால் சேதமடைந்து விட்டது.

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

வீடு எரியும் நேரத்தில் ஃபேஸ்புக் லைவ்வில் வந்து மத பரப்புரை செய்த சமி ஸ்மித், மேலும் ஒரு சிலவற்றை பகிர்ந்துள்ளார். "உங்களுக்கு தெரியுமா, கடவுள் எப்போதும் அவர் நினைப்பதை செய்திடுவார். அவரின் செயல்களை நம்மால் சில நேரங்களில் புரிந்துகொள்ள இயலாது" என்று ஸ்மித் லைவ்வில் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை பற்றி WYFF என்கிற டிவி சேனலுக்கு ஸ்மித் பேட்டி அளித்தபோது, "யாருக்கு வேண்டுமானாலும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கலாம். இப்படி நடக்க அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பது கணக்கில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரின் மகள் மற்றும் பேரக்குழந்தையின் பெட்ரூம் முழுவதுமாக தீயினால் சேதமடைந்தது. ஆனால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிகழ்விற்கு பின், பலர் அங்கு கூடி இறைவனை நினைத்து பிராத்தனை செய்துள்ளனர்.

கடவுள் நம்பிக்கை இருப்பது அவரவர் விருப்பம். ஆனால், அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்பதை இவரின் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: