சீனப் பொருட்களுக்கு மேலும் வரிவிதிக்க அமெரிக்கா திட்டம்

news18
Updated: July 11, 2018, 10:13 AM IST
சீனப் பொருட்களுக்கு மேலும் வரிவிதிக்க அமெரிக்கா திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
news18
Updated: July 11, 2018, 10:13 AM IST
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ரூ.  14 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் ஏற்படும் சூழல் அண்மைக்காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காடு வரிவிதிப்பை ஜுலை 6-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, சீனா அறிவுசார் சொத்துரிமையை திருடி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக வரிவிதித்து வருகிறது. இதன்படி, முதல்கட்டமாக சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 23,000 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதிப்பு ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், புதிதாக ரூ. 14 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதி பொருட்கள் மீது வரிவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கடல் உணவுகள், பழங்கள், காய்கறிகள், நூலிழை, மழைக்கோட்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டபிறகு அமல்படுத்தப்பட உள்ளது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...