இந்தியாவுக்கு ரூ.1,500 கோடி கடன் பாக்கி - அமெரிக்க எம்.பி நாடாளுமன்றத்தில் பேச்சு!

கடன் பாக்கி

கடந்த ஆண்டு ஒரு அமெரிக்க குடிமகன் மீதான கடன் சுமை என்பது 72,309 டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 84,000 டாலர்களுக்கு சற்று அதிகமாக அதிகரித்துள்ளது. ஒராண்டில் ஒரு அமெரிக்க குடிமகன் மீதான கடன் சுமை 10,000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது காட்டுகிறது

  • Share this:
அமெரிக்காவின் கடன் சுமை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் எம்.பி ஒருவர் இந்தியாவுக்கு ரூ.1,500 கோடி கடன் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்யும் நோக்கில் அமெரிக்கர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்குவது, தொழில் நிறுவனங்களுக்கு உதவி வழங்குவது உள்ளிட்டவற்றிற்காக 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி தொகுப்பு வழங்குவது குறித்து
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் திட்டமிட்டிருக்கிறார்.

2 டிரில்லியன் டாலர்கள் நிதி தொகுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது, இதில் பேசிய குடியரசுக் கட்சியை சேர்ந்த மேற்கு விர்ஜினியா செனட்டரான அலெக்ஸ் மூனே அமெரிக்கா பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் இந்த நேரத்தில் இந்த சிறப்புத் திட்டங்கள் தேவை தானா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என எச்சரித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த 2020ல் அமெரிக்காவின் கடன் சுமை 23.4 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் தற்போது நமது கடன் சுமை 29 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு அமெரிக்க குடிமகன் மீதான கடன் சுமை என்பது 72,309 டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 84,000 டாலர்களுக்கு சற்று அதிகமாக அதிகரித்துள்ளது. ஒராண்டில் ஒரு அமெரிக்க குடிமகன் மீதான கடன் சுமை 10,000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது காட்டுகிறது”

உலகளாவிய அளவில் சீனாவுடன் நாம் போட்டியில் இருந்து வருகிறோம். ஆனால் சீனாவுக்கு நாம் 1 ட்ரில்லியன் டாலர்களும், ஜப்பானிடம் ஒரு ட்ரில்லியன் டாலர்களும் கடன்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த தேசங்களுடன் நம் உறவு சுமூகமாக இல்லை எனப்தை கவனிக்க வேண்டும்.

இந்தியாவிடம் 216 பில்லியனும் (இந்திய மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய்), பிரேசிலிடம் 258 பில்லியனும் கடன் வைத்திருக்கிறோம். இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பணத்தை நாம் திருப்பி தர வேண்டியுள்ளது. 2000ல் நம் கடன் சுமை 5.6 ட்ரில்லியனாக இருந்தது ஒபாமா நிர்வாகத்தில் நம் கடன் சுமை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நிதி தொகுப்பு அறிவிப்பை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு செனட்டர் அலெக்ஸ் மூனே பேசியிருக்கிறார்.
Published by:Arun
First published: