Home /News /international /

அரசு செல்போன்களில் டிக் டாக் பயன்படுத்த தடை! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

அரசு செல்போன்களில் டிக் டாக் பயன்படுத்த தடை! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

டிக்டாக்

டிக்டாக்

அமெரிக்காவில் அரசு உபகரணங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்குமாறு, செனட் சபையில் மசோதா முன்மொழியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமடைந்துள்ள டிக் டாக், கடந்த ஆண்டு அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக உள்ளது. சீன நிறுவனமான டிக் டாக்கில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட்டர் Josh Hawley மசோதா தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்த மசோதா மேலவையில் நிறைவேறினால், அரசு செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை ஏற்படும். அதே நேரம், டிக் டாக் செயலியின் செயல்பாட்டில், பெய்ஜிங் அதிகாரிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று, டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also see:


 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tik Tok, Tiktac app

அடுத்த செய்தி