ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க இடைக்கால தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப் கட்சி தோல்வி

அமெரிக்க இடைக்கால தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப் கட்சி தோல்வி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில், செனட் சபையில் வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ள அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபையில் படுதோல்வி அடைந்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளை கொண்டது. பிரதிநிதிகளின் முழுசபைக்கான 435 உறுப்பினர்களையும், செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.  பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தாமதமானது.

  வாக்குப்பதிவு நிறைவடைந்த மாகாணங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் இதுவரை 91 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டிரம்பின் குடியரசுக்கட்சி 50 இடங்களிலும், ஜனநாயக கட்சி 41 இடங்களையும் பிடித்துள்ளன. பிரதிநிதிகள் சபையில் இதுவரை 329 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டிரம்பின் கட்சி 164 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 166 இடங்களை பிடித்துள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதலாக 21 இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 21 இடங்களை இழந்துள்ளது.

  இதனால் ஜனநாயக கட்சியே பிரதிநிதிகள் சபையில் அதிக இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மினசோட்டா மற்றும் மிச்சிகனில், செனட் சபைக்கு முதல் முறையாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷிதா லைப், இல்ஹான் ஒமர் என்ற இருவரும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Barack Obama, Donald Trump, US Congress, US Senate Election