அமெரிக்க இடைக்கால தேர்தல்: பின்னடைவை சந்தித்த டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதிபர் ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று தான் ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.

news18
Updated: November 8, 2018, 10:59 AM IST
அமெரிக்க இடைக்கால தேர்தல்: பின்னடைவை சந்தித்த டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
news18
Updated: November 8, 2018, 10:59 AM IST
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும் செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை எனப்படும் கீழவையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் அவை எனப்படும் மேலவையின்  100 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 219 இடங்களில் வெற்றி பெற்று கீழவையை கைப்பற்றியுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்கின்றனர்.


அதிபர் ட்ரம்பின் ஜனநாயக கட்சி 193 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. செனட் தேர்தலில் ட்ரம்பின் குடியரசு கட்சி 51 இடங்களை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக ட்ரம்ப் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்களுடன் ட்ரம்ப் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Loading...


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக கேள்வி எழுப்பிய சி.என்.என் செய்தியாளரை முரட்டுத்தனமானவர் என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். இதனிடையே அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதிபர் ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று தான் ராஜினாமா செய்வதாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also see...
First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்