• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்த அமெரிக்கர் 34 வயதில் மரணம்!

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்த அமெரிக்கர் 34 வயதில் மரணம்!

பீட் ஃப்ரேட்ஸ் (கோப்புப்படம்)

பீட் ஃப்ரேட்ஸ் (கோப்புப்படம்)

நரம்பு சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்ச் கடந்த 2014-ம் ஆண்டு உலகெங்கிலும் வைரலானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்வதேச அளவில் வைரலான ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்த அமெரிக்கர் தனது 34-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் விளையாட்டு வீரரான பீட் ஃப்ரேட்ஸ், நரம்பு சார்ந்த ஒரு கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான தீர்வாகவே ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்தார். நரம்பு சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்ச் கடந்த 2014-ம் ஆண்டு உலகெங்கிலும் வைரலானது.

    சர்வதேச பிரபலங்கள் முதல் உள்ளூர் வரையில் பலரும் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்து சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ALS என்னும் அந்த நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியாகக் கிடைத்தது.

    இந்த நரம்பு வியாதி நீண்ட நாள் நீடித்தால் மரணம் என்பது உறுதியான போதும் இது தொடர்பான விழிப்புணர்வு பலரையும் காப்பாற்றும் என்ற நோக்கில் செயல்பட்ட பீட் ஃப்ரேட்ஸ் அதே நோயின் தாக்கத்தால் காலமானார்.

    மேலும் பார்க்க: விண்வெளியில் ’ரோபோ ஹோட்டல்’ ஆரம்பிக்கும் நாசா..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: